cyclone gaja affected place
cyclone gaja affected place
cyclone gaja affected place
cyclone gaja affected place
cyclone gaja affected place

பகலாவது பசியோட போகுது; ராப்பொழுது பயத்தோடு நகருது!


புயல் அப்பகுதிகளை உண்மையிலேயே தடம் தெரியாமல் புரட்டிப் போட்டிருக்கிறது. களப்பணியில் இருக்கும் நண்பர் ஒருவர் தஞ்சை கிராமங்கள் எப்படி இருக்கின்றன எனக் கூறும்போது சொன்ன தகவல் இது.
புயலில் வீரியத்தைச் சொல்லும்போது இன்னும் ஓர் உவமையுடன் அவர் சொன்னார். மொட்டை அடித்த தலை மாதிரி இருக்கிறது தஞ்சையின் உள் கிராமங்கள் என்று. எங்கெங்கும் வெறுமை நிறைந்திருப்பதையே அவர் இவ்வாறு விவரித்தார்.
மேடை நாடகக் கலைஞரான விஜயகுமார், புயல் பாதித்த மறுநாள் முதல் களப்பணியில் இருக்கிறார். கள நிலவரம் குறித்து அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டதாவது:
''நவம்பர் 15 நள்ளிரவில் சுழல ஆரம்பித்த கஜா புயல் குடிசைப் பகுதிகள் அதிகமாக நிறைந்த தஞ்சாவூர் உள் பகுதிகளில் ஈவு இரக்கமின்றி பதம் பார்த்ததன் விளைவு பெரிய கோவில் சுற்றியுள்ள சில பகுதிகளைத் தாண்டியதுமே பாதிப்பு கண்கூடாகத் தெரிகிறது.
நெய்வேலி, அதிரன் விடுதி, சூரக்கோட்டை, கறம்பக்குடி, அதிராம்பட்டினம், ஒரத்தநாடு, பாப்பாநாடு, பட்டுக்கோட்டை, மதுக்கூர், புனல்வாசல், ஒட்டங்காடு, துறவிக்காடு,திருச்சிற்றம்பலம், பேராவூரணி, கொன்றைக்காடு, ஆலத்தூர், பள்ளத்தூர் இன்னும் பல கிராமங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.
ஒரு கிராமத்துக்கு நிவாரணப் பொருள் அளிக்கச் செல்லும்போதுதான் அண்ணா இந்த ஊரைத் தாண்டி இன்னும் சில ஊர்கள் இருக்கின்றன. அங்கேயும் செல்லுங்கள் என்று சொல்கிறார்கள். அந்த ஊருக்கே சாகசம் செய்ததுபோல் சென்ற எங்களுக்கு அதற்குப் பின்னாலும் ஒரு ஊர் தவிப்புடன் இருக்கிறது எனக் கேட்கும்போது நிலைமையை எப்படி யோசித்துப் பார்த்தாலும் கண் முன் நிறுத்த முடியவில்லை.
புயல் பாதித்து 10 நாட்களுக்கு மேலாகிவிட்டது. இன்னும் மின்சாரம் இல்லை. பகல் நேரத்தில்தான் நாங்கள் நிவாரணப் பொருட்களைக் கொண்டு செல்கிறோம். அப்படிச் சென்றபோது குக்கிராம பெண் ஒருவர், பகல் நேரமாவது பசியோடு போகுது, ராப்பொழுது பயமும் சேர்ந்து வருது என்றார். சூரக்கோட்டை, கடம்பங்குடி இன்னும் சில தஞ்சை கிராமங்களின் நிலை இதுதான்.
வீடில்லை. மின்சாரம் இல்லை. தண்ணீர் இல்லை உயிர் மட்டும்தான் ஒட்டிக் கொண்டிருக்கிறது அந்த மக்களுக்கு. இதில் கொடுமை என்னவென்றால் இன்று வரை சில உள் கிராமங்களில் தினந்தோறும் மழை பெய்கிறது. ஏதாவது ஈரச்சுவருக்கு அருகே மிச்சம் மீதியிருக்கும் ஓடுகள் கீழ் ஒதுங்கிக் கொள்கின்றனர். இந்தப் பகுதிகளுக்கு எல்லாம் மிக மிக அவசரத் தேவை தார்பாய்தான். குறைந்தபட்சம் கூரைக்கு அடியிலாவது பசித்திருப்பார்கள். இதைச் சொல்லும்போது வேதனையாகத் தான் இருக்கிறது. ஆனால், உணவு, உடை, உறைவிடம் எதுவுமே இன்றி நம் சகா எப்படித்தான் வாழ்க்கையைச் சகிப்பான்.
முதல் சில நாட்கள் நாங்கள் ஊர் தேடி சென்று உதவினோம். இப்போதெல்லாம் மக்கள் கூட்டம் கூட்டமாக பிரதான சாலைகளுக்கு வந்துவிடுகின்றனர். நிவாரணப் பொருட்களுடன் ஏதாவது வாகனம் வந்தால் உடனே அதை முற்றுகையிட்டு உதவி கோருகின்றனர். மனம் வெதும்பிப் போகிறது.
விதை நெல்லை விதைத்த விரல்கள் அவை. விளைந்த நெல்லை அள்ளி அள்ளி அளந்த கைகள் அவை. ஆனால் இன்று ஒரு கட்டைப்பையில் இருக்கும் சிறிய நிவாரணப் பொருட்களுக்காக கரம் கூப்புகிறது. அவர்களை எப்படிக் கடந்து செல்ல முடியும்?
ஒரு அரசாங்கம் இதற்குள் ஓடோடி வந்து சகல உதவிகளையும் செய்திருக்க வேண்டாமா? மின்வாரிய ஊழியர்கள்தான் சீரமைப்புப் பணிகளில் முனைப்புடன் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், மற்றபடி சாலைகள் இன்னும் சீரமைக்கப்படாமல் வேலைகள் பல முடங்கிக் கிடக்கின்றன.
தென்னை இப்பகுதியின் பிரதான விவசாயம். எப்படிப் பார்த்தாலும் குறைந்தது 50 லட்சம் தென்னை மரங்களாவது வீழ்ந்திருக்க வேண்டும். ஒவ்வொன்றும் 20 வருட மரம். ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன். எனது நண்பர் ஒருவர் சூரக்கோட்டையைச் சேர்ந்தவர். அவருக்கு 2000 தென்னை மரங்கள் இருந்தன. அண்மையில் அவரது திருமணம் நடந்தது. அப்போது திருமணப் பரிசாக தேங்காய்களை அனுப்பி வைத்தார். எளியோர்க்கு கொடுக்கும்படி சொல்லியிருந்தார். ஆனால், புயல் தாக்கிய பின்னர் அவரைப் பார்க்கச் சென்றபோது அத்தனை மரங்களையும் இழந்து நின்றார். அவருக்கு நாங்கள் அரிசி மூட்டை வழங்கி வந்தோம். இந்த நண்பரைப் போலத்தான் தஞ்சை கிராம விவசாயிகள் பலரும் ஒரே இரவில் தெருவுக்கு வந்துள்ளனர். இவர்களுக்கு எல்லாம் இந்த அரசாங்கம் என்ன செய்யப்போகிறது? என்று கேள்வி எழுப்பினார்.

சென்னை பெருவெள்ளத்துக்கு இருந்த ஆதரவு ‘கஜா’ புயல் பாதித்த டெல்டாவுக்கு இல்லாமல் போனது ஏன்?


சென்னை பெருவெள்ளத்துக்கு இருந்த ஆதரவு ‘கஜா’ புயல் பாதித்த டெல்டாவுக்கு இல்லாமல் போனது ஏன்?


தமிழகத்தில் மீண்டும் ஒரு புயல் உலுக்கி எடுத்து இருக்கிறது. தானே, சென்னை பெருவெள்ளம்,  ஒக்கி புயலை தொடர்ந்து ‘கஜா’ புயல் தமிழகத்தை பதம் பார்த்துள்ளது. கடலூர்,சென்னை, கன்னியாகுமரி மாவட்டத்தை தொடர்ந்து தற்போது இயற்கையின் கோரப் பசிக்கு பலியாகியுள்ளது டெல்டா மாவட்டங்கள்.
குறிப்பாக தமிழக கடல்பகுதியில் முனைப்பகுதியாக இருக்கும் வேதாரண்யம் பகுதியில் பாதிப்பு அதிகம். வேதாரண்யம் தொடங்கி பட்டுக்கோட்டை, பேராவூரணி,  அதிராமபட்டினம் வரையிலும் மிக மோசமான பாதிப்பு. வேதாரண்யத்தின் 50 கிலோ மீட்டர் சுற்றளவில் புரட்டி போட்டுள்ளது கஜா. 
உணவு, இருப்பிடம், மின்சாரம், தண்ணீர் இன்றி பல நாட்களாக மக்கள் பரிதவித்து வருகின்றனர். அதைவிட வாழ்வாதாரத்தை முற்றிலும் இழந்து அடுத்து என்ன செய்யப்போகிறோம் என்ற எதிர்கால மிரட்டல் அந்த மக்களை மிகுந்த மன சோர்வுக்கு ஆளாக்கியுள்ளது.
பெரும்பாலும் விவசாயப் பெருங்குடி மக்கள். நெல்லை தவிர கடலோரப்பகுதி என்பதால் தென்னை விவசாயம் நடைபெறும் பகுதி. அவ்வப்போது செலவுக்காக நெல்லை பயிரிடும் விவசாயிகள் குழந்தைகளின் படிப்பு, திருமணச் செலவு, எதிர்கால தேவை என அனைத்துக்கும் நம்பி இருந்தது இந்த தென்னை மரங்களை தான்.
குழந்தையை போல பார்த்து பார்த்த வளர்த்த தென்னை ஒரு நொடியில் விழுந்துவிட்டதால் எதிர்காலம் மக்களை வெகுவாக மிரட்டுகிறது. வேறு எந்த தொழிலும் இல்லாத பூமி, விவசாயம் மட்டுமே ஒரே வாழ்வாதாரம். சோறுடைத்த சோழ வளநாடு இப்போது தேம்பி தேம்பி அழுகிறது.  ஆனால் டெல்டாவின் அழுகுரல் தமிழகத்தின் மற்ற பகுதிகளுக்கு கேட்கேவில்லையோ என்றே எண்ண தோன்றுகிறது. சென்னை பெருவெள்ளத்துக்கு தமிழகம் காட்டியே ஒற்றுமையும், ஆதரவும் அந்த அளவுக்கு டெல்டா பக்கம் திரும்பவில்லையோ?அதற்கு சில காரணங்களும் இருக்கதான் செய்கின்றன.
சென்னையை தெரிந்த அளவுக்கு, சென்னையுடன் இருக்கும் தொடர்பு அளவுக்கு, சென்னையை பற்றிய புரிதல் அளவுக்கு தமிழகத்தின் மற்ற பகுதிகளை பற்றி பெரும்பாலானவர்களுக்கு புரிதல் குறைவாகவே இருக்கும். சென்னை என்பது ஒரு பகுதியல்ல. 
தமிழகத்தின் பல பகுதி மக்களும் சேர்ந்து உருவாக்கிய நகரம். தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் வாழும் மக்களுக்கு சொந்தக்காரர்களும், உறவினர்களும் வசிக்கும் இடம் சென்னை. ஒவ்வொரு தமிழர்களும் வந்து செல்லும் இடமாக சென்னை உள்ளது. தாங்கள் வாழும் பகுதியை தவிர மற்ற பகுதிகளை பற்றி தெரியாத தமிழர்களுக்கும் சென்னை வந்துபோகும் இடமாக உள்ளது.
இதனால் தான் சென்னைக்கு பாதிப்பு என்றதும் ஒட்டுமொத்த தமிழகமும், ஓடோடி வந்தது; உறவாக பார்த்தது. பாதிக்கப்பட்டவர்களுக்காக உதவிகள் பொருளாக, பணமாக குவிந்தது. மீட்பு பணிக்காக ஆயிரக்கணக்கானோர் சென்னையை நோக்கி படையெடுத்தனர். பெருவெள்ளத்தை, கடுமையான போராட்டத்தை சரியான தைரியத்துடன் எளிதாக எதிர்கொண்டது சென்னை.
ஆனால் டெல்டாவிலோ நிலைமை முற்லும் வேறானது.  சென்னையை போன்று எந்த தொடர்பு அந்த மக்களுக்கு இல்லை. மற்ற பகுதி மக்களுக்கு டெல்டாவை பற்றிய புரிதலும் இல்லை. இதனால் தான் கஜா பாதிப்பிக்கு பின் ஓடோடி வந்தவர்கள், உதவி செய்தவர்கள் எண்ணிக்கை அதிக அளவில் இல்லை.பாதிப்பும் சரி, அதை எதிர்கொள்ளும் சூழலும் சென்னையை ஒப்பிடுகையில் டெல்டாவில் மோசம்.
தொழில் சார்ந்த சென்னையில் நிறுவனங்கள்,தொழிலாளர்கள், உரிமையாளர்கள் என அனைவருக்கும் ஏற்பட்ட பொருளாதார இழப்புகளை ஒரு சில மாதங்களில் சரி செய்து விட முடிந்தது. ஊழியர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை இடுகட்ட அரசுமட்டுமின்றி  அவர்கள் பணிபுரியம் நிறுவனங்களும் முன் வந்தன. சம்பளமாக, சலுகையாக, பணமாக, பொருள் உதவியாக வந்து குவிந்தன.
ஊழியர்களுக்கு ஏற்பட்ட இழப்புக்கு கடமையாக இல்லாவிட்டாலும் தார்மீக ரீதியில் உதவி செய்ய நிறுவனங்கள் முன் வந்தன. அரசு ஊழியர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை ஈடுகட்ட அரசும் பலவிதங்களில் முன் வந்தது. ஆனால் அப்பாவி விவசாயிகளின் நிலையோ அப்படி இல்லையே. எந்த நிறுவனத்திலும் அவர்கள் வேலை செய்யவில்லையே; அவர்களுக்கு ஏற்பட்ட இழப்பை எந்த நிறுவனம் ஈடுகட்ட முடியும்.
 சென்னை பெருவெள்ளத்தில் இருசக்கர வாகனங்கள், கார்கள், நிறுவனங்கள், இயந்திரங்கள் என ஒவ்வொன்றுக்கும் இன்சூரன்ஸ் செய்யப்பட்டு இருந்ததால்  மிக கடுமையான விதிமுறைகளை சற்றளவு தளர்த்தி இழப்பீட்டு தொகையை இன்சூரன்ஸ் நிறுவனங்கள் கூட தந்து உதவின.பெரிய நகரத்தில், தலைநகரத்தில், தொழில் சார்ந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு இந்த வசதி இருந்ததே?
ஆனால் விவசாயத்தை உயிர் மூச்சாக கொண்டு வாழ்ந்த விவசாயிகளுக்கு அரசு சார்ந்த பயிர் இன்சூரன்ஸ் தவிர எந்த இன்சூரஸூம் வராதே; அவர்கள் என்ன செய்வார்கள். சென்னை பெருவெள்ளத்தின்போது சில ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இன்சூரன்ஸ் கொடுக்கப்பட்டது. ஆனால் கஜா பாதித்த டெல்டாவிலோ அரசு பயிர் காப்பீடு தவிர 200 கோடி ரூபாய் அளவுக்கு கூட இன்சூரன்ஸ் தொகை கொடுக்க வேண்டிய தேவை இருக்காது என்கிறது இன்சூரன்ஸ் வட்டாரங்கள்.
இன்சூரன்ஸ் தொகை கூட கட்ட முடியாத ஏழை விவசாயி, என்ன தான் செய்ய முடியும்? அவர்களுக்கு அரசு கணக்கிட்டு கொடுக்கும்  இழப்பீட்டை தவிர வேறு என்ன வாய்ப்பு இருக்கிறது. பல ஆண்டுகளாக வளர்த்த தென்னையும், சவுக்கும், வேறு பல மரங்களும் முறிந்து விழ, வாழ்வாதாரத்தை தொலைத்து விட்ட வேதனை அந்த மக்களை உலுக்கி எடுக்கிறது.
தை பிறந்தால் திருமணம்  ஏற்பாடுகள் செய்து வந்த குடும்பத்துக்கு இருந்த நிதி ஆதாரம் முழுவதையும் கஜா கபளீகரம் செய்துவிட விரக்தியின் விளிம்புக்கே சென்று விட்ட குடும்பங்கள் பல.இந்த இயற்கையின் தாக்குதலில் இருந்து எழுந்து நிற்க இன்னும் எத்தனை ஆண்டுகள் போராட வேண்டுமோ என்ற மலைப்பு டெல்டா மக்களை புரட்டி எடுக்கிறது. என்ன செய்யப்போகிறோம்? என்ற ஏக்கம் அவர்களை வாட்டி வதைக்கிறது.
இந்த வேதனையும், விரக்தியும் தான் அவர்களை, அரசியல்வாதிகள் உட்பட யாரும் ஊருக்குள்ளேயே வர வேண்டாம் என்று விரட்டும்  மனநிலைக்கு தள்ளியுள்ளது. தண்ணீர் இன்றி, விவசாயம் இன்றி, மாற்று தொழில் இன்றி எப்படியாகினும் விவசாயம் செய்து தீர வேண்டும் என போராடி வந்த விவசாய பெருங்குடி மக்கள், இன்று ஒரே நாளில் இயற்கையின் கோரப்பசிக்கு ஆளாகி தவிக்கிறார்கள். இயற்கைக்கு கூட அவர்கள் மீது கருணை இல்லையா? இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகுமோ டெல்டா மீண்டும் எழுந்து நிற்க.
news:tamil.thehindu.com/opinion/blogs/article25595482.ece

உதவிக்காக காத்திருக்கும் பரிதாபம்

10 நாட்களுக்கு மேலாகியும் இயல்பு நிலை திரும்பவில்லை: வீடு, உணவின்றி பரிதவிக்கும் சுக்கிரன்குண்டு கிராம மக்கள் - உதவிக்காக காத்திருக்கும் பரிதாபம்



சுக்கிரன்குண்டு கிராமத்தில் உள்ள குளத்தில் இருந்து குடிப்பதற்காக தண்ணீர் எடுத்து வரும் மக்கள்.

துக்கோட்டை மாவட்டம் ஆலங் குடி அருகே கஜா புயலால் பாதிக் கப்பட்ட நிலையில் வீடு, உண வின்றி ஒரு கிராமத்தைச் சேர்ந்த மக்கள் அனைவரும் ஒட்டுமொத்த மாக பரிதவித்து வருகின்றனர்.
எல்.என்.புரம் (அணவயல்) ஊராட்சி சுக்கிரன்குண்டு கிராமத் தில் 150-க்கும் மேற்பட்டோர் வசிக் கின்றனர். அனைவருமே கூலித் தொழிலாளர்கள். இங்கு பள்ளிக் கல்வியைக் கடந்தவர்கள் எவரு மில்லை. இங்குள்ள சுமார் 60 வீடுக ளில் சில வீடுகளே அரசால் கட்டிக் கொடுக்கப்பட்டவை. ஏனைய வீடு கள் அனைத்தும் சுவரற்ற குடிசை கள்தான். அரசால் கட்டித்தரப்பட்ட வீடுகள் மற்றும் உள்ள குடிசைகள் அனைத்துமே கஜா புயலால் கடும் சேதம் அடைந்துள்ளன.
தாழ்வான பகுதி என்பதால் புய லுக்குப் பிறகு ஒரு வாரம் வரை சுமார் 5 அடி உயரத்துக்கு குளம் போல இப்பகுதியைத் தண்ணீர் சூழ்ந்திருந்தது. இங்கு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இருந்தாலும் மின்சாரம் விநியோகிக்கப்படாத தால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள் ளது. வீடுகளில் இருந்த ரேஷன் அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட் கள் அனைத்தும் தண்ணீரில் அடித் துச் செல்லப்பட்டுவிட்டதால் அடுத்த வேளை உணவுக்கும் மாற்று உடைக்கும் வழியின்றி மக்கள் பெரும் சிரமப்படுகின்றனர்.
கழிவுநீருடன் தேங்கியுள்ள குளத்து நீரையே கிராம மக்கள் குடிநீராகப் பயன்படுத்துகின்றனர். ஆங்காங்கே தண்ணீர் தேங்கியுள்ள தால் அந்த இடங்கள் அனைத்துமே கொசு உற்பத்திக்கான காரணி களாகிவிட்டன. பிளீச்சிங் பவுடர் தெளிக்கப்படாததால், குழந்தைகள் உட்பட அதிகமானோர் காய்ச்ச லால் பாதிக்கப்பட்டு வீடுகளுக்குள் ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். ஒரு சிலர் மட்டும் இலவசமாகப் பெற்ற பிளாஸ்டிக் தார்ப்பாய், பயன்படுத்தப்பட்ட பிளக்ஸ் பேனர் களைக் கொண்டு குடிசைகளை மூடி வைத்துள்ளனர்.
எனவே, மாவட்ட அதிகாரிகள் ஒரு முறையேனும் இப்பகுதிக்கு வந்து பார்வையிட்டு அடிப்படை தேவைகளை நிறைவேற்றித் தர வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து இந்தக் கிராமத் தினர் சிலர் கூறியது: புயலுக் குப் பிறகு ஒரு முறை மட்டும் ஜெனரேட்டர் மூலம் மோட்டார் இயக்கப்பட்டு குடிநீர் விநியோகிக் கப்பட்டது. அந்தத் தண்ணீரை பிடித்து வைக்கக்கூட எங்களிடம் போதிய குடங்கள் இல்லை. வீடுகள் அனைத்தும் முழுமையாக சேதம் அடைந்துவிட்டன. உணவுப் பொருட்கள், துணிமணிகள், ரேஷன் கார்டுகள், பாய், போர்வை, பாத்திரங்கள் என அனைத்துமே தண்ணீரில் அடித்துச் செல்லப் பட்டுவிட்டன.
வயிறார சாப்பிட்டு 10 நாட்கள்
எங்களுக்காக முகாம் ஏற்பாடு செய்து, அங்கு தங்க வைத்து உணவ ளிக்கக் கூட யாரும் இல்லை. வயி றார சாப்பிட்டு 10 நாட்களாகிறது. மாற்று உடை இல்லை. கூலி வேலை யும் கிடைக்காததால் யாரேனும் உணவுப் பொருட்களை கொண்டு வரமாட்டார்களா? என்ற ஏக்கத் திலேயே பொழுதைக் கழிக்க வேண் டிய நிலை ஏற்பட்டுள்ளது. எங்க ளுக்கு ஏற்பட்ட இதுபோன்ற நிலை எங்கள் எதிரிக்கு கூட ஏற்பட்டுவிடக் கூடாது என்று கண்ணீர்மல்க தெரிவித்தனர்.
news:tamil.thehindu.com/tamilnadu/article25603373.ece

பாதிக்கப்பட்ட மக்கள் திருடர்கள் அல்ல

      

பாதிக்கப்பட்ட மக்கள் திருடர்கள் அல்ல



போரால் சீரழிந்த இடங்களில்தான் இப்படிப்பட்ட காட்சிகள் நடக்கும். இயற்கையே! என் செய்தாய் என் தமிழினத்தை? - யுவகிருஷ்ணா, ஊடகவியலாளர்.

காவிரிப் படுகையின் எந்தத் தெருவில் நுழைந்தாலும், ‘கஜா புயலால் பாதிக்கப்பட்டோர் முகாம்’ என்ற பெயர்ப்பலகைகள் அரை கிலோ மீட்டருக்கு ஒன்று தென்படுகின்றன. திரும்பிய பக்கமெல்லாம் முகாம்கள், முகாம்கள், முகாம்கள்.
குறுக்கும் நெடுக்குமாகப் பாய்ந்து செல்லும் பல நூறு நிவாரண வண்டிகள்... எண்ணற்ற ஊர்களிலிருந்து மக்கள் சேகரித்து அனுப்பும் பொருட்கள், வெளிநாடுகளிலிருந்து வந்து சேரும் ஏராளமான உதவித்தொகை... உண்மையில், குடிமைச் சமூகமே ஒரு ராணுவத்தைப் போல இணைந்து நின்று, இன்று காவிரிப் படுகை மக்களை அரணாகப் பாதுகாக்கிறது. அரச கட்டமைப்பின் பிரம்மாண்ட தோல்விக்கும், மனித மனதின் ஆதாரமான அறவுணர்ச்சிக்கும் இன்றைய காவிரிப் படுகை கிராமங்களே சாட்சி.
இரு வதந்திகள்
மக்கள் தொடர்பில் இரண்டு வதந்திகள் சுற்றுகின்றன. அவற்றைத் தெளிவுபடுத்தல் அவசியம் என்று நினைக்கிறேன்.
1. முதலில் நிவாரணப் பொருட்கள் ஏற்றிவரும் வாகனங்களை மக்கள் மிரட்டி பொருட்களை வழிப்பறி செய்கின்றனர் என்பது. இது முற்றிலும் தவறானது. மக்கள் யாரும் கொள்ளைக்காரர்கள் இல்லை; திருடர்கள் இல்லை. நிவாரண வாகனங்களில் இருக்கும் பிஸ்கட் பாக்கெட்டுகளையும், அரிசியையும், தண்ணீரையும் வைத்து அவர்கள் ஒன்றும் மாடி வீடு கட்டப்போவதில்லை.
நான்கு நாட்களாகக் கடும் பசி. ஏதேனும் ஒரு வாகனம் வருமா என எதிர்பார்த்துக் காத்திருந்து; ஏற்கெனவே காத்திருந்து கிடைத்த அனுபவத்தில்; இப்போது வரும் வாகனத்தை விட்டுவிடக் கூடாது என்ற பரிதவிப்பில் அவர்கள் கேட்கிறார்கள். அந்த அவலத்தின் குரல் கோபமாகத்தான் வெளிப்படும். அதை மிரட்டல் என்றோ வழிப்பறி என்றோ அழைப்பது மோசமானது; தவறானது.
நாம் கொடுக்கும் இரண்டு கிலோ அரிசியையும் நான்கு மெழுகுவத்திகளையும் பெற்றுக்கொள்ள அவர்கள் ஆதார் அட்டையைக் காட்டி கையெழுத்து போட வேண்டும் என எதிர்பார்க்கும் மனநிலை தயவுசெய்து வேண்டாம்.
2. நிவாரணப் பொருட்களைப் பங்கிட்டுக்கொள்வதில் சாதி பார்க்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. கிராமங்களில் ஊர்த் தெரு முதலிலும் காலனித் தெரு அதைத் தாண்டியும் இருக்கும். நிவாரண வண்டிகள் ஊரை நோக்கி வரும்போது முதலில் ஊர்த் தெரு இருப்பதால், அவர்கள் அதை முதலில் பெற்றுக்கொள்கிறார்கள் என்றும் சேரிக்கு எதுவும் செய்வதில்லை என்றும் பல பதிவுகளை இங்கு கண்டேன். இது முற்று முழுதான உண்மையோ அனைத்து ஊர்களிலும் இதுதான் நிலைமை என்பதோ இல்லை.
ஒருவருக்கு ஒருவர் இணைந்து நின்று உதவிக்கொள்கின்றனர். எங்கள் பயணத்தில், “எங்களுக்கு இவை போதும்... மற்ற ஊர்களுக்குக் கொடுங்கள்” என்று சொன்னவர்களை நாங்கள் கண்டோம். காலையிலிருந்து சாப்பிடாத எங்கள் வாகனத்தின் ஓட்டுநர், மாலை தன் கைக்குக் கிடைத்த ஒரு பொட்டலம் உணவை முகாமில் பசியில் வாடிய ஒரு குழந்தைக்குத் தந்தார். அந்த முகாமில் சமைக்கப்பட்ட உப்புமாவை ஓட்டுநருக்கு மக்கள் தந்தார்கள். அது உழைக்கும் வர்க்கத்தின் ஆதார உணர்ச்சி. இது பிளவுகளை இணைக்க வேண்டிய தருணம். மேலும் அதிகப்படுத்த வேண்டிய தருணம் அல்ல.
அவர்கள் நம்மைப் போல இருக்கிறார்கள்
நிவாரண வண்டிகளின் கண்களில் தென்பட வேண்டும் என்பதற்காக, அவர்களின் இரக்கத்தைக் கோர வேண்டும் என்பதற்காக உள்ளடங்கிய கிராமங்களைச் சேர்ந்தவர்கள் பிரதான சாலை அருகே அகதிகளைப் போலக் காத்திருக்கின்றனர். சாலையோரத்தில் பாத்திரத்தை வைத்துச் சமையல் செய்கின்றனர். வாகனங்களை நோக்கிக் கைகளை நீட்டியபடி ஓடிவருகின்றனர். இந்தக் காட்சி ஒவ்வொன்றும் நெஞ்சை அறுக்கிறது.
காவிரிப் படுகையின் விவசாயத் தொழிலாளர்கள் கடும் உழைப்புக்குப் பெயர்போனவர்கள். நாளொன்றுக்கு 10 மணி நேரத்துக்கும் மேலாகக் கடைமடையில் நின்ற கால்கள், இன்று ஒரு பிஸ்கட் பாக்கெட்டுக்காக ஏங்கி நிற்கிறது. அவர்கள் சாலையில் நின்று கையேந்துவதைக் கண்டு மனம் பொறுக்கவில்லை. தன்மானத்தை ஒதுக்கி வைத்து தங்கள் குழந்தைகளின் பசித்த வயிற்றை மனதில் கொண்டு சாலைகளில் நிற்கும் இவர்கள் என் அப்பாவைப் போல இருக்கிறார்கள். என் அண்ணனைப் போல இருக்கிறார்கள். என்னைப் போல இருக்கிறார்கள்.தன்மானத்தை ஒதுக்கி வைத்து, தங்கள் குழந்தைகளின் பசித்த வயிற்றை மனதில் கொண்டு சாலைகளில் நிற்கும் இவர்கள் என் அப்பாவைப் போல இருக்கிறார்கள். என் அண்ணனைப் போல இருக்கிறார்கள். என்னைப் போல இருக்கிறார்கள்.

உயிர் பிழைப்போம் என்ற நம்பிக்கை இல்லை


உயிர் பிழைப்போம் என்ற நம்பிக்கை இல்லை

அதிர்ச்சியில் இருந்து மீளாத   வேதாரண்யம் பகுதி மக்கள்






வேதாரண்யம் சிறுதலைக்காடு செல்லும் வழியில் உள்ள உப்பளங்களில் புயல் காற்றால் சேதமடைந்த உப்பு குவியல்கள்

‘கஜா’ புயல் பாதித்த கடந்த 15-ம் தேதி இரவுப் பொழுது முழுவதையும் வேதாரண்யம் பகுதி மக்கள் மரண பயத்துடன் கழித்துள்ளனர். அந்த அதிர்ச்சியில் இருந்து மீளமுடியாமல் பலரும் தவிக்கின்றனர்.
வேதாரண்யம் அருகே உள்ள பஞ்சநதிகுளம் நடுசேத்தியில் உள்ளது ஆவுடைக்கோன்காடு. விவசாயிகள், விவசாயக் கூலித் தொழிலாளர்கள் நிறைந்த பகுதி. அங்குள்ள காளியம்மன் கோயில் தெருவில் 114 குடும்பங்கள் வசிக் கின்றன. அனைவருமே விவசாயக் கூலித் தொழிலாளர்கள். நிறைய குடிசைகள் உள்ளன. மத்திய, மாநில அரசுகளின் வீடு கட்டும் திட்டங்களில் கட்டப்பட்ட வீடு களும் உள்ளன. ஆனால் நிதிப் பற்றாக்குறை காரணமாக பல வீடுகளில் ஜன்னல்கள் பொருத் தப்படவில்லை. சில வீடுகளில் கதவுகள் போதிய பாதுகாப்புடன் இல்லை. சுமார் 300 சதுர அடி பரப்புள்ள ஒரு சமுதாயக் கூடம், ஒரு கோயிலும் உள்ளது. இதைத் தவிர, வேறு பொதுக் கட்டிடம் எதுவும் அங்கு இல்லை.
அப்பகுதியைச் சேர்ந்தவர் உமாதேவி. அதிர்ச்சியில் இருந்து மீளாத அவர், மிரட்சியுடன் தங்கள் அனுபவத்தை கூறியதாவது:
“புயல் வீசப் போகுது; மழை கொட்டப் போகுதுனு சொல்லிட்டே இருந்தாங்க. ஆனால், பகல் பொழுது முழுவதும் வழக்கம்போல வெயில்தான் அடிச்சுது. கொஞ்சம் கூட மழை இல்லை. காற்றுகூட இல்லாமல், ரொம்ப அமைதியா இருந்திச்சு. இரவு 8 மணி வரைக் கும் புயலுக்கான எந்த அறிகுறியும் இல்லை. அதனால, புயல் வீசும்னு யாருமே நம்பல.
மாலை 6 மணிக்கு கரன்ட்டை நிறுத்திட்டாங்க. அதனால, சீக் கிரமே சாப்பிட்டுட்டு, தூங்கப் போனோம். இரவு 9 மணிக்கு லேசா மழை பெய்ய ஆரம்பிச்சுது. 10 மணி வாக்கில் கொஞ்சம் பலமாக காற்று வீசத் தொடங்கியது. இது புயலாக மாறப்போகுதுன்னு அப்போகூட நாங்க நினைக்கலை.
பத்தரை மணி இருக்கும். சுழல் காற்று வீசத் தொடங்கிச்சு. சொன்னபடியே புயல் வந்துடுச்சோன்னு, மனசெல்லாம் நடுங்க ஆரம்பிச்சுது. அடுத்த அரை மணி நேரத்தில, ‘ஊய்.. ஊய்..’னு பயங்கர சத்தத்தோட பேய்க் காற்று வீசியது.
தூங்கிட்டிருந்த குழந்தைகளை எல்லாம் தூக்கிக்கிட்டு அருகே இருக்கிற சமுதாயக் கூடத்துக்கு ஓடினோம். சுமார் 300 சதுர அடி மட்டுமே கொண்ட கட்டிடத்துக்குள்ள நாப்பது, அம்பது பேர் தஞ்சம் புகுந்தோம். இட நெருக்கடி. உட்காரக்கூட இட மில்லை. குழந்தைகளைத் தூக்கி வைச்சுக்கிட்டு, நின்னுட்டே இருந் தோம்.
நேரம் போகப் போக, காற்றின் கோரத்தாண்டவம் அதிகமாகிட்டே போச்சு. நடுராத்திரி 1 மணி இருக்கும். அதிபயங்கர சத்தத்தோட காற்று சுழன்று சுழன்று வீசியது.
எங்கள் குடிசை வீடுகள் எல்லாம் சின்னாபின்னமா ஆகியிருக்கும்னு தெரிஞ்சுக்கிட்டோம். பக்கத்துல இருந்த மரங்கள் எல்லாம் முறிஞ்சு, நாங்க நின்னுட்டிருந்த கட்டிடத்து மேல விழுந்துட்டே இருந்திச்சு. அந்த கட்டிடமும் இடிஞ்சு விழப்போகுதுன்னுதான் நினைச்சோம். விடிஞ்சா, உயிரோட இருப்போமா என்பதே தெரியல.
குழந்தைகள் பயத்துல அழ ஆரம்பிச்சிட்டாங்க. பெரியவங் களுக்குகூட பயம் வந்திடிச்சு. கும்மிருட்டுல, பக்கத்துல நிக்கிறது யார்னுகூட தெரியல. விடிய விடிய அப்படியே நின்னுட்டிருந்தோம்.
காலை 6 அல்லது 7 மணி இருக்கும். காற்றின் வேகம் சற்று குறைந்தது. கட்டிடத்தைவிட்டு மெதுவா வெளியே வந்தோம். அது எங்க கிராமம்தானா என்பதே தெரியவில்லை. திரும் பிய பக்கமெல்லாம் மரங்கள் தாறுமாறாக கிடந்தன. பாதைன்னு எதுவுமே இல்லை. முறிஞ்சு விழுந்த மரங்களுக்கு நடுவுல புகுந்து போய், வீடுகளைத் தேடினோம்.
இதுநாள் வரை குடும்பம், குட்டிகளோட வசிச்ச எங்க சொந்த வீட்டையே தேடிக் கண்டுபிடிக்கிற அளவுக்கு பல வீடுகள் அடையாளம் தெரியாதபடி உருக்குலைந்து கிடந்தன.
காதில் ஒலிச்சிட்டே இருக்கு
அந்த ராத்திரி நேரத்தில ஆக்ரோஷமா வீசுன புயல் காற்றின் சத்தம், இன்னும் காதில் ஒலிச்சிட்டே இருக்கு. அதை இப்போ நினைச்சாலும் பதறுது. படுத்தா, தூக்கம் வரலை. எங்களால் அந்த இரவை மறக்கவே முடியவில்லை. அந்த கொடுமையான நினைவில் இருந்து மீண்டுவர முடியாம தவிக்கிறோம்.
வீடுகள் எல்லாம் உருத்தெரி யாமல் நிற்கின்றன. அதை இப் போது சீரமைக்க முடியாது. இதுமட்டுமில்லாம, பல பொருட் களையும் பறிகொடுத்திருக்கோம். எங்கள் ஒட்டுமொத்த வாழ்க்கையை யும் இந்த புயல் சின்னாபின்ன மாக்கிட்டு போய்டிச்சு.
நாங்கள்லாம் தினக்கூலி தொழிலாளர்கள். எங்க வாழ்க்கை, எதிர்காலம் எல்லாம் ஒரே இரவுல சிதைந்து போய்டிச்சு. திரும்பவும் நாங்க பழைய நிலைமைக்கு எப்போ வரப்போறோம்னு தெரியல..!’’
இவ்வாறு கண்ணீர்மல்க கூறினார் உமாதேவி.
அவரைப் போலவே, அந்த ஊர் மக்கள் அனைவரும் புயல் காற்று ஏற்படுத்திய அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் தவிக்கின்றனர்.
அதே ஊரைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சித் தலைவர் எம்.குணசேகரன் கூறும்போது, “புயலில் சிக்கி ஏராளமான ஆடு, மாடு, கோழிகள் இறந்துவிட்டன. காயமடைந்த கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறோம். சேதமடைந்த வீட்டு கூரைகள் மேல் தார்ப்பாய்களைக் கொண்டு தற்காலிகமாக மூடிவருகிறோம். எங்கள் பகுதியில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் பாதுகாப்பான கான்கிரீட் வீடுகளை கட்டித் தர வேண்டும்.
எங்கள் பகுதியில் இருந்த சிறிய சமுதாயக்கூடக் கட்டிடம்தான் பல உயிர்களைக் காப்பாற்றியுள்ளது. அந்த கட்டிடத்தை விரிவுபடுத்தி, பெரிதாக கட்டித் தர வேண்டும். இப்பகுதியில் உள்ள எல்லா கிராமங்களிலும் இதுபோன்ற அரசுக் கட்டிடங்களை அதிக அள வில் கட்டினால், ஆபத்து காலத்தில் கைகொடுக்கும்’’ என்றார்.
இந்த கிராமம் ஓர் உதாரணம் மட்டுமே. வேதாரண்யம், தலை ஞாயிறு பகுதிகளில் உள்ள பல கிராமங்களின் நிலையும் இப்படித்தான் இருக்கிறது.
புயலால் எல்லாவற்றையும் இழந்து நிற்கும் அந்த மக்களுக்கு இப்போதைய தேவை என்பது அரசுகள் அளிக்கும் நிவாரணம் மட்டுமல்ல; பிற பகுதி மக்களின் அன்பும், ஆதரவும், அரவணைப் பும்தான்!நேரம் போகப் போக, காற்றின் கோரத்தாண்டவம் அதிகமாகிட்டே போச்சு. நடுராத்திரி 1 மணி இருக்கும். அதிபயங்கர சத்தத்தோட காற்று சுழன்று சுழன்று வீசியது.
link: etamil.thehindu.com
News:27.11.2018

Updates on 26/11/2018 : Faulty assesments by the Govt agencies


Relief efforts by govt as well as private agencies are slowly gathering pace. Photo below shows dry rations distributions at Seruthur - a village on the main road with relatively easier access and approach than others, on 26/11/2018.


















But other interior villages like Kameswaram shown below where all the families are reliant on community kitchens. There are still 125 out of the 300 families who are not only eating, but also living and sleeping in the relief camps here, as on 26/11/2018.  


















While relief work is just gathering momentum, the govt has already moved on to rehabilitation mode, without relief phase reaching closure. For instance in Seruthur village, the govt in preparation for the Central Assessment Team visit has announced on a board that this village had only 102 boats as part of compensation, despite there being almost 300 boats, even in records of the state fisheries dept. In retaliation, villagers have erased that figure from the board.
 























To add to the complexity, only boats are being counted, damage to boat repair and boat building infrastructure is not being counted. Hence, these boat yards fear that they may not recieve any help from the govt.



Updates on 25/11/2018

Woman from Pushpavanam shares her ordeal of having little drinking water available. They had to collect rain water to cook rice at the community kitchen where all the families are having their food. The heavy rains from last night has also reduced the amount of dry firewood available for cooking fuel.

Pushpavanam community leader sharing information that Fisheries Dept officials came for a survey and that a maximum of Rs.85,000 would be given for fibre boat damages. He makes a point that this amount is highly insufficient and would hardly suffice for nets and engine. They have decided not to accept such a measly amount as boat compensation

Gaja worst disaster since Tsunami : NDRF


After tsunami, cyclone Gaja is the worst natural disaster to hit Tamil Nadu, NDRF DC Raajan Baalu says



After 2004 tsunami, cyclone is the worst natural disaster to hit . It left a trail of destruction in several coastal districts and took a toll on agriculture to a serious extent, said deputy commandant of NDRF Raajan Baalu in an interview to TOI.

The wind speed of Gaja was equal to cyclone Vardha, which hit Chennai and other northern districts in 2016. Hence the damage was limited. But cyclone Gaja hit several coastal districts, particularly , Cuddalore, and adjoining districts like Tiruvarur, Thanjavur and Pudukottai. Several parts of the interior districts like Dindigal and Trichy have also faced the wrath of the cyclone.


Heavy rain hampers relief work - The Hindu


Post-Gaja, the downpour has left several areas waterlogged in the delta region
       

 IMD says over 92 mm of rainfall in Nagapattinam last night - 24/11/2018


Heavy rainfall in the delta region hampered relief and restoration work underway in the aftermath of Cyclone Gaja in Tiruvarur, Nagapattinam, Thanjavur and Pudukottai districts on Friday.
The heavy downpour slowed down the restoration work, especially work on restoring the electricity distribution network. With about 1.09 lakh electric poles having been uprooted, thousands of workers, including those from Kerala and Andhra Pradesh, are working overtime to restore power supply to the affected areas.

“The works were held up in certain places which witnessed heavy rain. But in places where there was mild or moderate rainfall, our workers braved the downpour to continue the works. We have supplied raincoats to workers wherever needed. Even where there has been heavy rain, the workers stayed in the place and resume the work as soon as there is a let up in the rain,” a senior Tangedco official supervising the operations in Nagapattinam district said.

Heavy rains lashed Valangaiman, Needamangalam, Thiruthuraipoondi, Kodavasal and Muthupet areas in Tiruvarur district. In Nagapattinam district, Vedaranyam, Sirkazhi and Mayiladuthurai areas received intermittent rainfall.

-https://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/heavy-rain-hampers-relief- work/article25582565.ece
                                                            Videos